2,676 காலி பணியிடங்கள் தேர்வு முடிவுகள் வெளியீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு

2,676 காலி பணியிடங்கள் தேர்வு முடிவுகள் வெளியீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வு மதிப்பெண்அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நேர்காணலுக்கான கடிதம்: நேர்காணலுக்கான அழைப்புக் கடிதத்தை மேற்கூறிய இணையதளத்தில் செப். 26-ம் தேதி முதல் தேர்வர்கள் தங்களின் லாக்-இன் ஐடி-யை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in