

தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குபடுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பாக பெற்றோருக் கான விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கும்போது பள்ளி நிர்வாகம் தெரிவிக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தரம் சார்ந்த தகவல்கள் உண்மையானவையா, அவை பயன்பாட்டில் உள்ளனவா என்று அறிந்து, அது குறித்து பெற்றோர் களின் கருத்துகளுக்கும் இடம் அளிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்கு படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும், தனியார் பள்ளி கட்டண விவரங்களை பெற்றோருக்கு தெரிவிக்க வேண் டும் என்பன உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்தரங்கில் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் “தமிழகத்தில் உள்ள 11ஆயிரத்து 462 தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. விதிகளை கடைப்பிடிக்காமல் அரசை ஏமாற்றும் முதலாளிகள் நடத்தும் பள்ளிகளில் நமது பிள்ளைகள் படித்தால், அவர்கள் எப்படி நல்ல குடிமகன்களாக உருவாவார்கள்?” என்றார்.
வீதி நாடக கலைஞர் ஜே.ஜேசுதாஸ் பேசும்போது, “பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசும்போது குழந்தைகளின் மனதில் வக்கிரத்தையும், கோபத் தையும் ஊக்குவிக்கிறோம். குழந் தைகளுடன் உரையாடி முடிவெடுக் கும் குடும்ப ஜனநாயகத்தை அனைவரின் வீட்டிலும் கடைப் பிடிக்க வேண்டும்”என்றார்.
தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன் பேசும்போது, “கல்வி உரிமை சட்டம் 2009-ல் இயற்றப்பட்டத்தில் இருந்து மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு அதிகமாகி யுள்ளது. எனவே பெற்றோர் களுக்கான விழிப்புணர்வு முகாம் கள் நடத்த வேண்டும்,”என்றார்.
இக்கூட்டத்தில் மன நல ஆலோசகர் எஸ்.எம்.ஏ.ஜமாலுதீன், தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் எஸ்.ஜாகீர் உசேன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.