

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,106 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 747 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 104.89 அடியாகவும், நீர் இருப்பு 71.32 டிஎம்சியாகவும் இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.29 அடியும், நீர் இருப்பு 1.76 டிஎம்சியும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலைமுதல் விநாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.