உதயநிதி துணை முதல்வரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

உதயநிதி துணை முதல்வரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published on

கடலூர்: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டால் பல்வேறு திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்று கடலூரில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் மறைந்த டாக்டர் கிருபாநிதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் சனிக்கிழமை (செப்.21) இரவு கலந்து கொண்ட பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

திருப்பதி லட்டில் கலப்படம் செய்து அதில் மிருகத்தின் கொழுப்பை வைக்கிறார்கள் என்றால் அவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்டால் வாழ்த்துகள். கருத்து கூற எதுவும் இல்லை. முன்னாள் முதல்வர்கள் அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் துணையாக நின்ற பல்வேறு அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்பதை திமுகவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in