தமிழக மீனவர்கள் 37 பேர் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை

தமிழக மீனவர்கள் 37 பேர் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை

Published on

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் மூன்று விசைப் படகுகளை கைப்பற்றி 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு கடற்பகுதியில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 37 மீனவர்களையும் எல்லை தாண்டியக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கைது செய்தனர்.

இரவு மூன்று விசைப் படகுகளும், 37 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின்னர் நாளை காலை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 53 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 396 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in