Published : 21 Sep 2024 05:30 AM
Last Updated : 21 Sep 2024 05:30 AM

ஆலந்தூரில் அம்மா உணவகத்தில் இயங்கும் அரசு பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா செய்துவந்தது. அதிமுக ஆட்சியில் வழங்கியதை போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்துஎல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்துக்கு வந்து, அம்மா உணவகங்கள் இயங்குவதை பார்வையிட்டு, தங்கள் இடங்களிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x