Published : 07 Jun 2018 10:12 AM
Last Updated : 07 Jun 2018 10:12 AM

திரையரங்குகளில் 4 நாட்கள் காலா சிறப்பு காட்சி: தமிழக உள்துறை அனுமதி

நடிகர் ரஜினியின் காலா பட சிறப்பு காட்சிகளை இன்று முதல் 4 நாட்கள் திரையிட தமிழக உள்துறை அனுமதி அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம், இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக உள்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்படமான ‘காலா’ ஜுன் 7-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படுவதாகவும், இதை முன்னிட்டு ஜுன் 7 முதல் 10-ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கும்படி, ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவன இயக்குநர் கடிதம் அளித்திருந்தார்.

இந்தக் கடிதத்தை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, அவரது கோரிக்கையை ஏற்று, காலா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளை 4 நாட்களும் அனைத்து திரையரங்களிலும் திரையிட உரிமத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதித்துள்ளது. சம்பந்தப்பட்ட திரையரங்கின் உரிமையாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வரி அதிகாரிகளிடம் இதுதொடர்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x