“ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்த ஜென்மத்தில் நடக்காது” - நாராயணசாமி கருத்து

நாராயணசாமி | கோப்புப்படம்
நாராயணசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்த ஜென்மத்தில் நடக்காது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த ஜென்மத்தில் நடக்காது. மாநிலத்தில் ஆட்சி கலைந்துவிட்டாலோ, நாடாளுமன்றம் கவிழ்ந்தாலோ என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தால் அதன் பிறகு எத்தனை நாட்களுக்குள் தேர்தல் வரும் எனத் தெளிவில்லை. இதற்கு பாஜக கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

இண்டியா கூட்டணியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் இது நடக்காத காரியம் என தெரிவித்துள்ளார். நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை திசைதிருப்பவே இந்த வேலையைச் செய்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்த ஜென்மத்தில் நடக்காது.” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in