கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம்: ஒரு நபர் ஆணைய காலஅவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம்: ஒரு நபர் ஆணைய காலஅவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதிகோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு, 3 மாதத்தில் தனதுஅறிக்கையை சமர்ப்பிக்கும் என்றுதமிழக அரசு தெரிவித்தது.

தொடர்ந்து, கருணாபுரத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், உயிரிழந்தோர் குடும்பத்தினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் 6 மாத அவகாசம் வழங்குமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டது. அதைப் பரிசீலித்து, 3 மாதம் வரை அவகாசம் வழங்குவதாகவும், வரும் டிசம்பர் 19-ம் தேதிக்குள் ஆணையத்தின் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in