Published : 20 Sep 2024 06:16 AM
Last Updated : 20 Sep 2024 06:16 AM
சென்னை: ஆவடி யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால் சென்ட்ரல் - ஆவடி மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு அதிகாலை 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செப்.20, 21, 22 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்ட்ரலுக்கு செப்.20, 21 ஆகிய தேதிகளில் இரவு 10.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்ட்ரலுக்கு 20, 21, 22 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த தகவல் சென்னை ரயில்வேகோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT