Published : 19 Sep 2024 05:55 AM
Last Updated : 19 Sep 2024 05:55 AM

காஞ்சியில் செப்.28-ல் திமுக பவள விழா பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: திமுக பவள விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28-ம் தேதி நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டு நிறைவடைந்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் செப்.28-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திமுக பவள விழா பொதுக் கூட்டம், பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடக்க உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகிறார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்புரை நிகழ்த்துகிறார். காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சிகேவி. தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்குகிறார்.

பொதுக் கூட்டத்தில் திக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், ஐயூஎம்எல் தலைவர் காதர்மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீதர் வாண்டையார், பொன்குமார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், அதியமான், திருப்பூர் அல்தாப், பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x