Published : 19 Sep 2024 06:05 AM
Last Updated : 19 Sep 2024 06:05 AM
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப் பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் உள்ளபொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (18).ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
நகரியில் சாலை விபத்து: அவர், கடந்த 15-ம் தேதி ஆந்திர மாநிலம், நகரியில் நடந்தசாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது.
பின்னர் அவர் திருவள்ளூர்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பல்வேறுதுறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தநிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தையும், சகோதரிகளும் முன்வந்தனர்.
அணிவகுப்பு மரியாதை: அவரது இதயம், இதய வால்வு, நுரையீரல், இரு சிறுநீரகங்கள், கால் எலும்பு, கல்லீரல்,கண்கள் தானமாகப் பெறப்பட்டன. அதில், இதயம், கால் எலும்பு,ஒரு சிறுநீரகம் உள்ளிட்டவை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. மற்ற உறுப்புகள் தகுதியின் அடிப்படையில் பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. உறுப்புகளை தானமாக அளித்து பலருக்கு வாழ்க்கையளித்த சுரேஷின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டு, அஞ்சலிசெலுத்தப்பட்டது.
இதில், மருத்துவமனை டீன் தேரணி ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், பேராசிரி யர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத் துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT