

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டில், சுய உதவிக்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய, தொழில் சார்ந்த 60 ஆயிரம் கூட்டு பொறுப்புக் குழுக்கள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2014-15ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ‘நாடு முழுவதும் நடப்பு நிதியாண்டில் 5 லட்சம் கூட்டு பொறுப்புக் குழுக்கள் அமைக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இப்பணியை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், இலக்கை மாநில வாரியாக பிரித்துக் கொடுத்து, வளர்ச்சியை கண்காணிக்கவும் நபார்டு வங்கியிடம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 58,400 குழுக்கள், புதுச்சேரியில் 1,600 குழுக்கள் என 60 ஆயிரம் கூட்டு பொறுப்புக் குழுக்கள் உருவாக் கும் பணி நபார்டு வங்கியின் சென்னை மண்டல அலுவலகத் திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் குழுவில் தேக்கம்
‘மகளிர் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளில் அண்மைக் காலமாக ஒருவித தேக்க நிலை காணப்படுகிறது. அதனை போக்கும் வகையில் நபார்டு வங்கியின் கூட்டு பொறுப்புக் குழு வங்கி இணைப்பு திட்டம் அமையும்’ என நபார்டு வங்கியின் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி அலுவலர் எம்.ஆர். நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
‘தி இந்து’ நாளிதழிடம் அவர் கூறும்போது, ‘ உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று வங்கிகளிடம் இருந்து கிடைக்கும் கடன் அளவு அனைவரும் தொழில் தொடங்க போதுமானதாக இல்லை. இரண்டாவது, உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவதில் அதிக சிரமங்கள் இருக்கின்றன.
இந்த இரண்டு பிரச்சினைகளை யும் தீர்க்கும்வகையில் அமைந் துள்ளது கூட்டு பொறுப்புக் குழுத் திட்டம். நன்றாக செயல் படும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருந்து ஒத்த தொழில் செய்யக் கூடிய 5-க்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து தனியாக கூட்டுப் பொறுப்புக் குழுக்களை அமைக்கலாம். கூட்டாக செயல்பட வேண்டும். மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். தனியாக கணக்கு புத்தகங்கள் வைத்திருக்க வேண்டும். வங்கிகள் இந்த கூட்டு பொறுப்புக் குழுக்களில் உள்ள நபர்களின் கடன் தேவை களை தனித்தனியாக அனு மானித்து தனித்தனியாகவோ அல்லது கூட்டுக் கடனாகவோ வழங்கும். கூட்டு பொறுப்புக் குழுவில் உள்ள ஒருவர் கடனை திரும்ப செலுத்தாவிட்டாலும், அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
வங்கிகள் குறுகிய, நீண்ட கால கடன்களுக்கு என்ன வட்டி வசூலிக்கிறதோ அதே வட்டிதான் இந்த கடன்களுக்கும் வசூலிக் கப்படும். மானியம் எதுவும் கிடை யாது. அதேநேரத்தில் அரசு அறி விக்கும் குறிப்பிட்ட தொழில்களுக் கான மானியம், அந்த தொழில் களை தொடங்கும் கூட்டு பொறுப் புக் குழுக்களுக்கும் கிடைக்கும். சுய உதவிக் குழுக்களில் செயல்பட்டுக் கொண்டே கூட்டு பொறுப்புக் குழுக்களிலும் பெண்கள் செயல்படலாம். கூட்டு பொறுப்புக் குழுக்கள் அமைக்க சுய உதவிக் குழுக்களை கலைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர் என பெண்கள் கூட்டு பொறுப்புக் குழுக்களை உருவாக்கலாம். விவசாய பொருள்களை சந்தைப்படுத்து வதற்கும் கூட்டு பொறுப்புக் குழுக்களை அமைக்கலாம். மேலும், விவசாயம் அல்லாத ஊரக தொழில்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
கூட்டு பொறுப்புக் குழுக்கள் அமைக்க தொண்டு நிறுவனங்களுக்கு நபார்டு வங்கி நிதியுதவி அளிக்கிறது. கூட்டு பொறுப்புக் குழு அமைக்கப்பட்டு வங்கி இணைப்பு பெற்று, கடன் பெற்றவுடன் முதல் தவணையாக ரூ.1,000, ஓராண்டு கடனை திருப்பி செலுத்தியவுடன் ரூ.500, முழு கடனையும் திருப்பி செலுத்தியவுடன் ரூ.500 என ஒரு குழுவுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலாதாரமாக இருப்பது வங்கிகளிடம் இருந்து கடன் இணைப்பு பெறுவதேயாகும். எனவே, தொண்டு நிறுவனங்கள் வங்கிகளிடம் இசைவு பெற்ற பிறகே திட்ட வரைவு தயாரிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால் www.thoothukudi@nabard.org என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யலாம்” என்று எம்.ஆர். நடராஜன் தெரிவித்தார்.