Last Updated : 18 Jun, 2018 12:10 PM

 

Published : 18 Jun 2018 12:10 PM
Last Updated : 18 Jun 2018 12:10 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு: விநாடிக்கு 32,421 கன அடி நீர் வரத்து

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 45அடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூரை வந்தடைந்ததால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 847 கனஅடி அளவுக்கே இருந்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி மாலையில் 5 மணியளவில் விநாடிக்கு 15,000 கன அடியை எட்டியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 45.05 அடியாகவும், நீர் இருப்பு 14.83 டிஎம்சி-யாகவும் உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 32,421 கன அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x