Published : 02 Jun 2018 10:05 AM
Last Updated : 02 Jun 2018 10:05 AM

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்புடன் ஈஷா இணைந்து உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

ஈஷா அறக்கட்டளையின் நதிகளை மீட்போம் இயக்கமும் ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் அமைப் பும் இணைந்து இவ்வருட உலக சுற்றுச்சூழல் தினத்தை உலகம் முழுவதிலும் 250 இடங்களில் கொண்டாட உள்ளன.

நதிகளை மீட்போம் இயக்கத் தின் தன்னார்வத் தொண்டர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்த 250 இடங்களை சுத்தம் செய்வதோடு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தியபின் குப்பையாக மாறும் ‘சிங்கிள்-யூஸ்’ பிளாஸ்டிக் வகைகளை உடனடியாகத் தடைசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதன் முக்கிய நிகழ்வாக, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஐ.நா. சபை சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் எரிக் சொல்ஹெய்ம், ஐ.நா. சபைக்கான இந்திய நல்லெண்ண தூதர் டியா மிர்சா ஆகியோருடன் ஜூன் 5-ம் தேதி டெல்லியில் உரையாட உள்ளார்.

இதுகுறித்து ஜக்கி வாசுதேவ் கூறும்போது, ‘‘வரமாக இருக்க வேண்டிய ஒன்றை, மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கும் போது எப்படி சாபமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதற்கு பிளாஸ்டிக் சிறந்த உதாரணம். பொறுப்புணர் வோடு பிளாஸ்டிக்கை கையாண்டு, ‘சிங்கிள்-யூஸ்' பிளாஸ்டிக்கை தடை செய்யும் கொள்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது’’ என்றார்.

உலக சுற்றுச்சூழல் தினத்துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே, நதிகளை மீட்போம் தன்னார்வத் தொண்டர்களும் ஆதரவாளர்களும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது ஐ.நா. சபையின் முன்னெடுப்பில் உலகெங்கும் நடத்தப்படும் நிகழ்வு. ஜூன் 5 அன்று நடைபெறும் இக்கொண்டாட்டம்தான் உலகெங்கிலும் நிகழும் சுற்றுச்சூழல் கொண்டாட்டங்களிலேயே மிகப்பெரியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x