விஜய் | மோடி
விஜய் | மோடி

‘‘நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும்’’ - பிரதமர் மோடிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

Published on

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, தவெக தலைவரும், நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ்பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in