எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதா?: அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதா?: அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை யில் அரசு மற்றும் தனியார் மருத்து வக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டிய அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதா என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கிழக்கு கொத்தமங்கலம் கிராமத் தைச் சேர்ந்த டி.தங்கராசு மனு தாக்கல் செய்துள்ளார்.

எனது மகன் டி.ராமானுஜம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200-க்கு 1101 மதிப்பெண் கள் பெற்றுள்ளார். எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் 194.50 பெற்றுள் ளார்.

நாங்கள் எம்பிபிஎஸ் படிப்புக் காக விண்ணப்பித்து விட்டு கலந்தாய்வுக்கு காத்திருந்த நேரத் தில், கலந்தாய்வு பட்டியலில் எனது மகன் பெயர் இல்லை. எம்பிபிஎஸ் தேர்வுக் குழுவினரை அணுகி விவரம் கேட்ட போது, 27.1.1998ல் எனது மகன் பிறந்துள்ளதால் 31.12.2014-ம் தேதி 17 வயதை நிறைவு செய்ய முடியாது. ஆகவே இந்த ஆண்டு எம்பிபிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என கூறி விட்டனர்.

நாங்கள் ஆதிதிராவிட பறையன் இனத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 10-ம் வகுப்பில் 452 மதிப்பெண்களைப் பெற்ற எனது மகன், 12-ம் வகுப்பில் 1101 மதிப் பெண்களைப் பெற்றுள்ளார். இந்நிலையில் 17 வயதை நிறைவு செய்ய வெறும் 27 நாள் களே குறையும் நிலையில், தொழில்நுட்ப ரீதியான இந்தக் காரணத்தைக் கூறி எனது மக னுக்கு எம்பிபிஎஸ் பயில்வதற்கான வாய்ப்பை மறுப்பது சரியல்ல.

ஆகவே, வயது தொடர்பான இந்தப் பிரச்சினையில் உரிய விதிவிலக்கு அளித்திடவும், எனது மகனுக்கு எம்பிபிஎஸ் பயில இடம் ஒதுக்குமாறும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தங்கராசு தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி வி.ராம சுப்பிரமணியன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட் டின் கீழ் நிரப்ப வேண்டிய அனைத்து எம்பிபிஎஸ் இடங் களும் நிரப்பட்டு விட்டதாக அரசு கூடுதல் வழக்கறிஞர் பி.சஞ்சய் காந்தி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். இடங் கள் அனைத்தும் நிரம்பிவிட்டனவா என்பது தொடர்பான அறிக்கையை எம்பிபிஎஸ் தேர்வுக் குழுவினர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in