டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 6,290 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 26,104 ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களுக்குத் தொகுப்பூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 500-ம், விற்பனையாளருக்கு ரூ. 400-ம், உதவி விற்பனையாளருக்கு ரூ.300-ம் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ. 12.94 கோடி கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in