Published : 13 Jun 2018 10:46 AM
Last Updated : 13 Jun 2018 10:46 AM

போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது: 25 பாஸ்போர்ட்கள், ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் கடந்த மே 7-ம் தேதி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து தமிழகம் வந்த தேனியைச் சேர்ந்த டி.தேவராஜ் (49) என்பவர் போலி பாஸ்போர்ட் ஒன்றை உடன் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் கடந்த 7-ம் தேதி சென்னையில் இருந்து துருக்கி செல்ல முயன்ற புதுப்பேட்டையைச் சேர்ந்த கே.மதிவாணன் (58) என்பவர் 5 போலி பாஸ்போர்ட்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த ஜி.தனபால் (55), அவரது மகன் கார்த்திக் (24), கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்த எஸ்.முனியாண்டி (52) ஆகிய மூவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்கள் மூவரும் போலி ஆவணங்களைப் பயன் படுத்தி பாஸ்போர்ட் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி யது உறுதி செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர்களை சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த தனபால் உள்ளிட்ட மூவரையும் திருவல்லிக்கேணி பகுதியில் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 25 போலி பாஸ்போர்ட்கள், ரூ.5 லட்சம் பணம், கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x