

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு, அமைச்சர்கள் மலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், தீரன் சின்னமலை வாரிசுதாரர்களை கௌரவித்து 565 பயனாளிகளுக்கு ரூ.39.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச் சர் எடப்பாடி கே.பழனிச் சாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தொழிற்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்கு வரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்த கண்காட்சியில் சிறந்த அரங்கமாக தேர்வு செய்யப்பட்ட சித்த மருத்துவத்துறைக்கு முதல் பரிசையும், வேளாண்மைத் துறைக்கு இரண்டாம் பரிசினையும், கால்நடை பராமரிப்புத்துறைக்கு மூன்றாம் பரிசினையும் அமைச்சர்கள் வழங்கினர்.