Published : 01 Aug 2014 10:30 AM
Last Updated : 01 Aug 2014 10:30 AM

இலங்கை மாநாட்டுக்கு செல்ல சுப்பிரமணியன் சுவாமிக்கு தடை கோரி வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை

சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாதுகாப்பு குழு இலங்கை மாநாட்டுக்கு செல்ல தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கொல் லப்பட்டு வருவதும், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருவதும் அதிகரித்து வருகிறது. இதுவரை 500-க்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்

பட்டுள்ளனர். எனவே மீனவர் களைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களை மத்திய அரசு அமர்த்த வேண்டும்.

இதுவரை இலங்கை கடற்படைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் இறுதி அறிக்கையை கியூ பிரிவு போலீஸார் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழக மீனவர்களின் நிலை குறித்து கடலோரப் பகுதியை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற கப்பல் படை அட்மிரல் ஒருவரை நியமித்து உத்தரவிடவேண்டும் எனக்கோரி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தமுருகன் என்பவர் ஏற்கெனவே பொது நல வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார்.

இதே வழக்கில் மேலும் ஒரு மனுவை மனுதாரர் வியாழக் கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

இலங்கை தலைநகர் கொழும்பில் 18.8.2014 முதல் 20.8.2014 வரை நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினர் இலங்கை செல்ல இருக்கின்றனர். எனவே, தமிழக மீனவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழக பாதுகாப்பு மற்றும் தமிழக மீனவர்கள் நலன் கருதி இவர்களை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வரும் 12-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x