தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப். 11) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 16-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி பந்தூர் தாலுகா அலுவலகம், கிருஷ்ணகிரியில் 4 செ.மீ. மழை பதிவானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in