Published : 03 Jun 2018 01:52 PM
Last Updated : 03 Jun 2018 01:52 PM

கருணாநிதி இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் கூறுகையில், ''திமுக இல்லாத தமிழக அரசியல்தான் அதிமுகவின் நிலைப்பாடு. அரசியலில் எங்கள் தலைவர்கள் அதைத்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.

கட்சி ரீதியாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. தனிப்பட்ட கருத்தாக சொல்ல வேண்டுமென்றால் திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும். அதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x