Published : 27 Aug 2014 09:34 AM
Last Updated : 27 Aug 2014 09:34 AM

பிரியாணி விருந்து.. இன்பச் சுற்றுலா.. தங்க மோதிரம்: களைகட்டியுள்ள திமுக உட்கட்சித் தேர்தல்

தமிழகம் முழுவதும் திமுக உட்கட்சித் தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் நகரம், ஒன்றியம், பேரூர் பொறுப்புகளைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. பிரியாணி விருந்து, இன்பச் சுற்றுலா, தங்க மோதிரம், கணிசமான தொகை என்று திமுக வாக்காளர்கள் காட்டில் பரிசு மழை பெய்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவில் ஓராண்டுக்கு முன்பே உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான மாவட்டங்களில் வார்டு அளவி லான பதவிகள் நிரப்பப் பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நகரம், ஒன்றியம், பேரூர் பொறுப்புகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. உட்கட்சி மோதல்கள் மற்றும் வன்முறை களைத் தவிர்ப்பதற்காக பெரும் பாலான கட்சிப் பதவிகள் பேச்சுவார்த்தை மூலம் நிரப்பப் படுகின்றன. ஒரு சில இடங்களில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் நகரச் செய லாளர் மற்றும் ஒன்றியச் செய லாளர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

சேலம் மாவட்டத்தில் சமீபத் தில் பனமரத்துப்பட்டி, சங்ககிரி, கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கான தேர்தலில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் வீரபாண்டி ராஜா ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கோவை அன்னூரில் 15 ஊராட்சிகளில் பேச்சுவார்த்தை மூலம் பதவிகள் நிரப்பப்பட்டு விட்டன. செப்டம்பர் 1-ம் தேதி அங்கு ஒன்றியச் செயலாளர் தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 53 ஓட்டுகள் உள்ளன. பதவியைப் பிடிக்கும் ஆசையில் ஓட்டுக்கு கணிசமான தொகை நிர்ணயித்திருப்பதாக அங்குள்ள நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இவை தவிர கோவை குற்றாலம், ஊட்டி, வால்பாறை ஆகிய இடங் களுக்கு கட்சியினரை சுற்றுலா வுக்கு அழைத்துச் சென்று பிரியாணி விருந்து வழங்கு கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஒரு ஓட்டுக்கு முன்பணம், பிரியாணி விருந்து, தங்க மோதிரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கணிச மான தொகை ஒன்றும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கெல மங்கலம் ஒன்றியச் செயலாளர் பதவிக்காக ராயக்கோட்டையில் சில ஆயிரங்களை முன்பணமாக கொடுத்துள்ளனர். பிரியாணி, மது விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர குடும்பத்துடன் ஓகேனக்கல்லுக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர்.

திருச்சியில் கடந்த வாரம் செல்வராஜ் மற்றும் நேரு ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு பல்வேறு நகரம், ஒன்றியச் செயலாளர் பதவிகளில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மதுரை புறநகர் பகுதியில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் நகர பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்குமா என்ற கலக்கத்தில் தொண்டர்கள் உள்ளனர். சமீபத் தில் ஸ்டாலின் ஆதரவாளரான மதுரை மாநகர் பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி, குற்றாலத்துக்குச் சென்று அழகிரி யின் ஆதரவாளரான மன்னனை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மீது தலைமைக்கு புகார் அளிக்கப் பட்டது. ஆனால், அவரோ, ‘மன்னனையும், ஸ்டாலின் அணிக் குள் இழுக்கத்தான் குற்றாலம் சென்றேன்’ என்று கூறியிருக் கிறாராம். ஆனால், அவரது பொறுப்புக் குழு உறுப்பினர்களே இதை ஏற்றுக்கொள்ள மறுத்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு தேர்தலில் வன்முறை நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தொண்டர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x