Published : 30 Jun 2018 07:55 AM
Last Updated : 30 Jun 2018 07:55 AM

ஜெயலலிதா ஆட்சியின்போதே பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டம் அகற்றம்: அமைச்சர் நிலோபர் கபீல் திட்டவட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போதே பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டம் அகற்றப்பட்டு விட்டது என்று அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கையி்ல் அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார் பேசும்போது, ‘‘பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இளம்பெண்கள் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் பணிக்கு அழைக்கப்பட்டு, 3 ஆண்டுகள் கழித்து, அவர்களுக்கு குறைந்த தொகை கொடுக்கின்றனர்.

அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. அதே போல், தொழிலாளர் நலத்துறையில் கடந்த திமுக ஆட்சியில் முத்தரப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் குழுக்கள் தற்போது இல்லை. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிலோபர் கபீல், ‘‘பஞ்சாலைகளில் தொழில் பழகுநராக இளம் பெண்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.33.60 ஊதியமாக அரசு நிர்ணயித்துள்ளது. சுமங் கலி திட்டம் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போதே அகற்றப்பட்டுவிட்டது.

முத்தரப்புக் குழுக்களை மாற்றி அமைப்பதற்கான பணி கள் தற்போது நடந்து வருகின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நி்ர்ணயிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x