ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரிகள் 10 பேருக்கு தமிழகத்தில் பணி: தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு

தலைமை செயலர் முருகானந்தம்
தலைமை செயலர் முருகானந்தம்
Updated on
1 min read

சென்னை: கடந்த 2022-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வான 10 பேருக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தலைமைச்செயலர் நா.முருகானந்தம் நேற்று வெளியிட்ட உத்தரவில்கூறியிருப்பதாவது: தங்களது பயிற்சியை முடித்த2022-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்டம் குளித்தலை உதவி ஆட்சியராக ஸ்வாதி ஸ்ரீ, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உதவி ஆட்சியராக ஆயுஷ் வெங்கட் வத்ஸ், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் உதவி ஆட்சியராகஎஸ்.சிவானந்தம், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உதவிஆட்சியராக ஆனந்த் குமார் சிங்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உதவி ஆட்சியராக பி.ஐ.ஆஷிக் அலி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சார் ஆட்சியராக ஹிரிதயா எஸ்.விஜயன் ஆகியோ நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார் ஆட்சியராக கே.சங்கீதா, திண்டுக்கல் மாவட்டம் பழநி சார் ஆட்சியராக எஸ்.கிஷன் குமார், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக வினய்குமார் மீனா, தேனி மாவட்டம் பெரியகுளம் சார் ஆட்சியராக ரஜத் பீட்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in