ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
Updated on
1 min read

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென ஒரு நாள் பயணமாக டெல்லி சென்று திரும்பினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. சட்டப்படி, ஒரு ஆளுநரின் பதவிக் காலம் முடிவுற்றால் வேறு ஒரு ஆளுநர் நியமிக்கப்படும் வரை தொடரும். அல்லது பதவி நீட்டிப்புக்கான உத்தரவு வெளியிடப்படலாம். ஆனால், பதவி நீட்டிப்புக்கான எந்த உத்தரவும் வராத நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக ஆளுநராக உள்ளார். இதன் தொடர்ச்சியாக ஆக.1, ஆக.19, ஆக.24-ம் தேதி என 3 முறை ஆளுநர் டெல்லி சென்று வந்தார். இதேபோல் நேற்று காலை 6.30 மணிக்கு திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சென்னை திரும்பினார்: பயணம் சொந்த காரணங்களுக்காக என்றும், ஒரே நாளில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், அவர் பதவி நீட்டிப்பு தொடர்பாக சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 8.20 மணிக்கு அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in