புதுச்சேரி: நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் 157-வது பிறந்த நாள்; தமிழ் அமைப்பினர் மலரஞ்சலி

நினைவிடத்தில் மலர் வணக்கம்
நினைவிடத்தில் மலர் வணக்கம்
Updated on
1 min read

புதுச்சேரி: நாடகத் தந்தை எனப் போற்றப்படும் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 157வது பிறந்த நாளையொட்டி, கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழ் அமைப்பினர் இன்று (செப்.7) மலர் வணக்கம் நிகழ்த்தினர். அரசு விழாவாக கொண்டாட கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை தலைவர் பொறியாளர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார். அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த பாஸ்கரன் (எ) தட்சணாமூர்த்தி கலந்துகொண்டு சுடுகாட்டிலுள்ள நினைவிடத்தில் சங்கரதாசர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் .சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர் .கோவிந்தராசு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.

பைரவி தலைமையில் சங்கரதாசருக்கு பாமாலை சூட்டும் பாவரங்கம் நடைபெற்றது. இதில் 15 பாவலர்கள் கலந்துகொண்டு பாமாலை சூட்டினர். தமிழ் அமைப்புகள் சார்பில் சங்கரதாசர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in