Published : 07 Sep 2024 06:09 AM
Last Updated : 07 Sep 2024 06:09 AM
தூத்துக்குடி: ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29). எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவரான இவர், 2022-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2 ஆண்டுகள் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பயிற்சி ஏ.எஸ்.பி.யாக தஞ்சாவூரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை 6 மாதங்கள் பணியாற்றினார்.
பின்னர் ஹைதராபாத்தில் 2 மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்த மதன், தற்போது தூத்துக்குடி நகர ஏஎஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 9-ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார். தூத்துக்குடி ஏஎஸ்பியாக பொறுப்பேற்கும் மதன், ஐபிஎஸ் பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதிஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் மதனுக்கு, குடியரசுத் தலைவர் கோப்பை, பிரதமர் பேட்டன் மற்றும் உள்துறை அமைச்சர் ரிவால்வர் ஆகியவற்றை சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT