தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் திருமுருகன்பூண்டி கேது தலத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அவிநாசி: தமிழ்நாடு டிஜிபி-யான சங்கர் ஜிவால் திருமுருகன்பூண்டி கேது தலத்தில் குடும்பத்துடன் இன்று (ஆக. 30) சாமி தரிசனம் செய்தார்.

திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சாமி கோயில் உள்ளது. அதை ஒட்டியே பிரசித்தபெற்ற தொன்மையான மங்காளம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது. இதில் கேது திருத்தலமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக, ராகு, கேது சர்ப்ப தோஷங்கள் நீங்க பக்தர்கள் இங்கு வந்து சிறப்பு பரிகார பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி-யான சங்கர் ஜிவால் இன்று இந்த கோயிலில், குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தார். நேற்று திருமுருகன்பூண்டிக்கு வந்தவர், அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கிவிட்டு இன்று அதிகாலை குடும்பத்துடன் கேது தலத்தில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் கோவைக்கு சென்றார். டிஜிபி வருகையையொட்டி கோயில் வளாகம், தங்கும் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in