Published : 30 Aug 2024 05:50 AM
Last Updated : 30 Aug 2024 05:50 AM
சென்னை: மும்பை, சென்னை, தூத்துக்குடி கொல்கத்தா, கோவா உட்பட 12 துறைமுகங்களில் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என18,000 பேர் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்வு வழங்கப்படுவதுவழக்கம்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஆனால், 31 மாதங்களாகக் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், துறைமுக சரக்குகள் முனையத்தில் தனியார்மயமாக்கல் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.28-ம் தேதிமுதல் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 5 தொழிற்சங்கங்கள் கடந்த 26-ம் தேதி அறிவித்தன.
இதற்கிடையே, இருதரப்பு ஊதிய பேச்சுவார்த்தைக் குழு மற்றும் இந்திய துறைமுக சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில், துறைமுக ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி, 2021-ம் ஆண்டு டிச.31-ம் தேதி நிலவரப்படி, அடிப்படை ஊதியத்தின் மொத்த தொகையில் 8.5 சதவீதம் ஊதியஉயர்வு அளிக்கப்படும். மேலும், 2022-ம் ஆண்டு ஜன.1-ம் தேதியின்படி, 30 சதவீதம் மாறக்கூடிய அகவிலைப்படி (VDA) வழங்கப் படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட் டத்தை திரும்பப்பெற்றுள்ளனர். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சரியான நேரத்தில் இதில் தலையிட்டு தீர்வு கண்டுள் ளார்.
இதுகுறித்து, இந்திய நீர்வழிப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன நிர்வாகி ஒருவர் கூறுகையில், “துறைமுக ஊழியர் களுக்கு 8.5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதனால், துறைமுக கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT