Published : 03 Jun 2018 09:01 AM
Last Updated : 03 Jun 2018 09:01 AM

விண்ணைத் தாண்டி வேடந்தாங்கலுக்கு வருவாயா?

 

மிழகத்தின் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்துக்கு அருகே உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மியான்மர் மட்டுமின்றி கனடா, ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் இங்கு ஆண்டுதோறும் வருகின்றன. நவம்பர் முதல் மார்ச் வரை அதிக அளவிலான பறவைகளை இங்கு காணமுடியும்.

இந்த சீசனுக்காக, வேடந்தாங்கல் சரணாலயம் கடந்த ஆண்டு அக்போடர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சீசனில் அமெரிக்கா, ஸ்வீடன், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 87 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் ஊசிவால் வாத்து, கிளுவை, நீலச்சிறகி, தட்டவாயன், பச்சைக்காலி, மஞ்சள் மூக்கு நாரை, பவளக்காலி, பட்டாணி உள்ளன் ஆகியவை முக்கியமானவை. இவற்றைக் காண 1,16,000 பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.

தற்போது சீசன் முடிவடையும் நிலையிலும், சுமார் 4,500 பறவை இனங்கள் காணப்படுகின்றன. கடைசியாக வந்த மஞ்சள் மூக்கு நாரைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ளன. விரைவில் அவையும் இடம்பெயரும் நிலையில் உள்ளன. இந்த ஆண்டுக்கான சீசன் முடிவடைவதால், ஜூன் 10 வரை சரணாலயத்தை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 11-ம் தேதி மூடப்படும் சரணாலயம், மீண்டும் அடுத்த சீசனுக்கு திறக்கப்படும் என்று வனச்சரகர் சுப்பையா தெரிவித்தார்.

படங்கள்: எம்.முத்துகணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x