இஸ்ரோ நடத்திய போட்டியில் சாய்ராம் அணிக்கு 2-ம் இடம்: குடியரசுத் தலைவர் பரிசு வழங்கினார்

இஸ்ரோ ரோபோட்டிக் சேலஞ்ச் 2024 போட்டியில் 2-ம் இடம்பெற்ற சாய்ராம் கல்வி நிறுவன அணி மாணவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பரிசு வழங்கினார். உடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
இஸ்ரோ ரோபோட்டிக் சேலஞ்ச் 2024 போட்டியில் 2-ம் இடம்பெற்ற சாய்ராம் கல்வி நிறுவன அணி மாணவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பரிசு வழங்கினார். உடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
Updated on
1 min read

சென்னை: தேசிய விண்வெளி தின விழா புதுடெல்லியில் நடைபெற்றது. விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அணிகள் பங்கேற்கும் வகையில் இஸ்ரோ ரோபோட்டிக் சேலஞ்ச் (IRoC) 2024 என்ற போட்டி இஸ்ரோவால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இஸ்ரோ ரோபோட்டிக் சேலஞ்ச் (IRoC) 2024 போட்டியில் சாய்ராம் கல்வி நிறுவனங்களின் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட 13 திறமையான உறுப்பினர்கள் அடங்கிய அணி (Ad Astra Team) பங்கேற்று 2-ம் இடம் பிடித்தது. அணியைச் சேர்ந்த தனுஷ் குமார், பிரபாகரன் குடியரசுத் தலைவரிடமிருந்து பரிசு, சான்றிதழைப் பெற்றனர்.

இந்த 2 மாணவர்கள் மற்றும் Ad Astra Team-க்கு துணைபுரிந்த குழுவினர், ஆசிரியர்களை சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைவர் சாய் பிரகாஷ் லியோமுத்து பாராட்டி, வாழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in