Published : 14 Jun 2018 12:23 pm

Updated : 14 Jun 2018 12:24 pm

 

Published : 14 Jun 2018 12:23 PM
Last Updated : 14 Jun 2018 12:24 PM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு; நல்லதே நடக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

18

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் நல்லதே நடக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மதியம் 1:00 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் மட்டுமின்றி நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வரவுள்ள சூழலில் நான் எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது. அப்படி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனால், நல்லதே நடக்கும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.


தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author