நத்தத்தில் குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகள் கிடந்ததால் மக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரம் கிடந்த நாட்டு வெடிகளைப் பார்வையிடும் காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரம் கிடந்த நாட்டு வெடிகளைப் பார்வையிடும் காவல்துறையினர்.
Updated on
1 min read


நத்தம்: நத்தத்தில் குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகள் கிடந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறை ரோடு ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கலைநகர் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை சாலையின் அருகே 20-க்கும் மேற்பட்ட சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகள் சிதறிக் கிடந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நத்தம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீஸார் சிதறிக் கிடந்த நாட்டு வெடிகளை அங்கிருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர்.

நேற்று நத்தம் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், இன்று குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகிலேயே நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குள் நாட்டு வெடிகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து நத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in