குன்னூர் - கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் விழுந்து கார் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் - கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் விழுந்து கார் சேதம்: போக்குவரத்து பாதிப்பு
Updated on
1 min read

குன்னூர்: குன்னூர் - கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் விழுந்து கார் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று காலை குன்னூர் - கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் அவ்வழியாக சென்ற கார் சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காற்றால் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீர்படுத்தும் பணிகளும் மின்வாரியத்தால் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in