கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது: சுங்கத்துறை விசாரணை

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது: சுங்கத்துறை விசாரணை

Published on

கோவை: கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துக் கைப்பற்றினர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. காலை 3.45 மணியளவில் கோவை வரும் ஷார்ஜா விமானம் மீண்டும் அதிகாலை 4.30 மணியளவில் ஷார்ஜாவுக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதன்படி இன்று (ஆக.26) காலை ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணிகள் யாரும் அதற்கு உரிமை கோராததால் இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in