Published : 19 May 2018 08:38 AM
Last Updated : 19 May 2018 08:38 AM

சென்னை - கோவைக்கு சிறப்பு கட்டண ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு வரும் 22-ம் தேதி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06043) மறுநாள் காலை 6.45 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும். இது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 20-ம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x