

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறப்போவதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடந்தது.
இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாய், "நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறுவது என்று செயற்குழு முடிவு செய்துள்ளது.
தொகுதி உடன்பாடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த கட்சியின் உயர்நிலைக் குழுவுக்கு செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைத் தமிழர் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை, சிறுபான்மையினர் நலன், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் திமுக கூட்டணியை தேர்வு செய்துள்ளோம்.
எங்கள் கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரவுள்ளன. தேமுதிகவும் வரவேண்டும் என பகிரங்கமாக அவர்களை அழைக்கிறோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால் அதுபற்றி பரிசீலிப்போம்" என்றார் ரிபாய்.