Published : 23 Aug 2024 06:56 AM
Last Updated : 23 Aug 2024 06:56 AM
சென்னை: திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில்புதிய உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டாபர் இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம்ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன்அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில்துறை, பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
அந்த வகையில், வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது.
250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண்ராய். தொழில் வழிகாட்டி நிறுவனமேலாண்மை இயக்குநர் மற்றும்தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில்ராஜ், டாபர் இந்தியா நிறுவன தலைமைச் செயல் அலுவலர் மோஹித் மல்ஹோத்ரா, செயல்பாட்டுத் தலைவர் ராகுல் அவஸ்தி, உற்பதித் தலைவர் ஹ்ரிகேஷ் ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT