கோப்புப் படம்
கோப்புப் படம்

‘மருந்து விற்பனையகத்தில் 70 மருந்துகள் தரமற்றவை’

Published on

சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 70 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி,கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் சளித்தொற்று, குடற்புழு நீக்கம், கால்சியம் குறைபாடு, கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 70 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம்,கர்நாடகம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும். இதன் கூடுதல் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in