Published : 23 Aug 2024 05:29 AM
Last Updated : 23 Aug 2024 05:29 AM

26 கிலோவுக்கு மேல் அடைத்து விற்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா டெல்லி சென்று, பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து, வணிகர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வைத்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய நுகர்வோர்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்தார். அப்போது, நுகர்வோர் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.

அப்போதுபேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு, தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநிலகூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன் ஆகியோர் உடனிந்தனர். அந்த மனுவில் இடம்பெற்ற விவரங்கள் வருமாறு:

அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் 26 கிலோவுக்கு மேல் பைகளில் அடைத்து விற்பதற்கு இதுவரை வரி விதிப்பு இல்லை. ஆனால், தற்போது 2011 எடையளவுச் சட்டத்தில் பிரிவு 3-ஐ திருத்தம் செய்து, 26 கிலோவுக்கு மேல் அடைக்கப்பட்ட அனைத்துஉணவு பொருட்களும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவதற்கானசட்டமுன்வடிவை கொண்டுவர இருப்பதாக அறிகிறேன்.

இந்த சட்ட முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில்கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உறுதியளித்தார் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x