Published : 21 Aug 2024 08:42 AM
Last Updated : 21 Aug 2024 08:42 AM
தூத்துக்குடி: பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக வெற்றி பெற்றுஆட்சிக்கு வந்தவுடன், ஏழை மக்களின் நலனுக்காக, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இரண்டாவது கையெழுத்துமூலம் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளார். இந்த நாட்டை பிரதமர் மோடி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின்வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், வஉசி துறைமுக விரிவாக்கத் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. தூத்துக்குடி-மதுரை இரட்டை ரயில் பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. ஓடுதளம் மட்டும் 3 கிலோமீட்டர் தூரம் கொண்டது. அதாவது,சென்னையைவிட மிகப்பெரிய ஓடுதளம் கொண்ட, பெரிய ஏர்பஸ் விமானங்கள் தரையிறங்கும் வசதி கொண்டதாக தூத்துக்குடி விமான நிலையம் அமைந்து வருகிறது.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசு விழாவாகும். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வருவதால், தமிழ்நாட்டில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தமிழக அமைச்சர்கள் மக்களுக்கு செய்யும் தீங்கு இன்னும் அதிகமாகும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT