Published : 21 Aug 2024 04:50 AM
Last Updated : 21 Aug 2024 04:50 AM
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80-வது பிறந்த நாள் விழா தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80-வது பிறந்தநாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடமான தியாக பூமியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்எல்ஏ. மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தின் நுழைவுவாயில் அருகே அமைந்துள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தியின் உருவச்சிலைக்கு செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்எஸ்.ராஜேஷ்குமார், துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் படத்துக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காங்கிரஸ் மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் நிர்மல் சந்த் மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா ராஜூ ஏற்பாட்டில் மருத்துவ முகாம்நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கருத்தரங்கமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: ராஜீவ்காந்தி பிறந்தநாளை யொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பதிவில்,‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80-வது பிறந்த நாளில், அவர்நம் நாட்டுக்கு ஆற்றிய சிறப்பானபங்களிப்புகளை நினைவுகூர்கி றோம். நவீன, தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா என்றஅவரது கனவும், அதற்கான அவரதுமுன்னோடி முயற்சிகளும் நமதுவளர்ச்சிக்கு தொடர்ந்து வழிகாட்டி யாக விளங்கி வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT