Published : 28 May 2018 07:29 AM
Last Updated : 28 May 2018 07:29 AM

தூத்துக்குடியில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது; பலியானோர் குடும்ப நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு- பாதிக்கப்பட்ட மக்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கிறார்

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதையடுத்து அங்கு அமலில் இருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி செல்கிறார்.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்து முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி யில் கடந்த 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்தது. போராட்ட அறிவிப்பையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத் தப்பட்டது.

தடையை மீறி 22-ம் தேதி காலை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். கல்வீச்சு, தடியடி சம்பவங்களால் போராட்டம் கலவர மாக மாறியது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, கல்வீச்சு, தடியடியில் 34 போலீஸார் உட்பட 136 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

முடிவுக்கு வந்தது

தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள், வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும்வென்றான் குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு 25-ம் தேதி காலை 8 மணி வரை நீடிக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து பதற்றம் நீடித்ததால் மே 27-ம் தேதி (நேற்று) வரை தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. பதற்றத்தைத் தணிக்க அரசு தரப் பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட் டது.

இதன்காரணமாக தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பி, மக்களின் இயல்பு வாழ்க்கை சீரடைந்துள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இதனால், நேற்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. பதற்றம் தணிந்ததால் தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்படவில்லை. அதேநேரத்தில், தூத்துக்குடி மாநகரில் மட்டும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. முக்கிய சாலைக ளில் போலீஸார் தொடர்ந்து ரோந் துப் பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு தல் கூறினார். டிஜிபி டி.கே. ராஜேந்திரனும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்தார்.

நிவாரண நிதி உயர்வு

இந்நிலையில், துப்பாக்கிச் சூட் டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு அரசு ஏற்கெனவே அறிவித்த நிவாரண நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச் சூட் டில் துரதிருஷ்டவசமாக 13 பேர் உயிரிழந்தது எனக்கு மிகவும் துயரத்தையும் வேதனையும் அளித்தது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டேன். தூத்துக் குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அங்கே சென்று உயிரிழந்தவர்க ளின் குடும்பத்தினர், காயமடைந்தோரை சந்தித்தபோது, அவர்கள் நிவாரண நிதி உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையிலும் நிவாரண நிதியை உயர்த்தி வழங்கக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டதையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை யும் தமிழக அரசு பரிசீலித்தது.

அதனடிப்படையில், துப்பாக் கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரண உதவியை உயர்த்தி, ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சத்தை ரூ.5 லட்சமாகவும் லேசான காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை ரூ.1.5 லட்சமாகவும் உயர்த்தி முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள் ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கள் கிழமை) தூத்துக்குடி செல்கிறார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை அவர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

துணை முதல்வருடன் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் செல்கின்றனர்.

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் தற்போ தைய நிலை குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் துணை முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை முடிந்து சென்னை திரும்பும் அவர், தூத்துக்குடி மாவட்ட நிலைமை குறித்து முதல் வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்கவுள்ளது. இதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், துணை முதல்வர், அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இந்த பேரவைக் கூட்டத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x