ஒலிம்பிக் வெற்றியாளர்களின் சாதனையை நினைவுகூரும் அஞ்சல் உறை வெளியீடு

ஒலிம்பிக் போட்டி வெற்றியாளர்களின் சாதனைகளை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் உறையை தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ்  வெளியிட்டார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் (வலமிருந்து 2-வது) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated on
1 min read

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2024 ஒலிம்பிக் போட்டி வெற்றியாளர்களின் சாதனைகளை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் உறையை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது. இத்துடன் ‘அஞ்சல் சேவை -மக்கள் சேவை’ என்ற புதிய தலைப்புடன் தனித்துவமிக்க இந்திய அஞ்சல் இலச்சினையை கொண்டுள்ள மணம் வீசும் படம் உள்ள அஞ்சல் அட்டையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர்மரியம்மா தாமஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு உறை, மணம் வீசும் படத்துடன் கூடிய அஞ்சல் அட்டைஆகியவை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கிடைக்கும். தபால்தலை சேகரிப்பவர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in