Published : 17 Aug 2024 04:45 AM
Last Updated : 17 Aug 2024 04:45 AM

‘நாடாளுமன்ற தேர்தல் 2024; 40-க்கு 40 தென்திசையின் தீர்ப்பு’ - முதல்வர் ஸ்டாலின் எழுதிய நூல் வெளியீடு

சென்னை: திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல்2024; 40-க்கு 40 தென் திசையின்தீர்ப்பு’ என்ற நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். இதை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த. 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சூளுரைத்தது. ஆனால், தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நிலையை இண்டியா கூட்டணி ஏற்படுத்தியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை திமுக கூட்டணி பெற்றதை ஆவணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

வெற்றியை திமுக கூட்டணி எப்படிச் சாத்தியமாக்கியது, முதல்வர் ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம், 2023-ல் இண்டியா கூட்டணிக்கு வித்திட்ட சென்னையில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழா ஆகியவற்றின் விவரங்கள் இந்நூலில் பதிவு தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்கம், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆகியவையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள், பல்வேறு ஊடகங்களுக்கு அவர் அளித்த சிறப்புப்பேட்டிகள், திமுகவின் தேர்தல்விளம்பரங்கள், 40-க்கு 40 வெற்றியை பெற்ற தேர்தல் முடிவுகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், அதன் புள்ளிவிவரங்களும் இதில் உள்ளன. மேலும் ஏராளமான படங்கள் இன்ஃபோ கிராபிக்ஸ் இந்த நூலில் உள்ளன.

நிகழ்ச்சியில், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா,அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்புதலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், இணை அமைப்பு செயலாளர்அன்பகம் கலை, துணை அமைப்புசெயலாளர்கள் எஸ்.ஆஸ்டின், ப.தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x