சுதந்திர தின கொண்டாட்டம்: திண்டுக்கல் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீஸார் சோதனை

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனை
Updated on
1 min read

திண்டுக்கல்: சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் ரயில் நிலையம், திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மோப்பநாய் ராக்கி, மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தினர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த சோதனை நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in