ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பலமான தடைகளை எதிர்கொண்ட போதும், மக்களின் உரிமைகளுக்காக போராடும் தங்களின் மனவுறுதி அசைக்க முடியாதது என்பதை தாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். தாங்கள் இதே வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து வழிநடத்த விழைகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in