தமிழகம் முழுவதும் 24 கூடுதல் எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் 24 கூடுதல் எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 56 எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.9) 24 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று வெளியிட்ட உத்தரவு: தஞ்சாவூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் எஸ்பியாக இருந்த வி.ஜெயச்சந்திரனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமையிடத்தில் இருந்த கூடுதல் எஸ்பி குத்தாலிங்கம், சென்னை தி.நகர் துணை ஆணையராகவும், மதுரை உயர்நீதிமன்ற யூனிட் விஜிலென்ஸ் பிரிவு கூடுதல் எஸ்பி எஸ்.விஜயகுமார், திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை சிறப்பு டிவிசன் எஸ்பிசிஐடி கூடுதல் எஸ்பி ஜி.கார்த்திகேயன் சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பி சி.சங்கு போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பி வி.கார்த்திக், பழனி சிறப்பு காவல்படை கமாண்டன்டாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் எஸ்பி எஸ்.அசோக் குமார் கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையராகவும், ராமநாதபுரம் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் எஸ்பி ஏ.அருண் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை தலைமையிடத்து கூடுதல் எஸ்பி கே.முத்துகுமார் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராகவும், தஞ்சாவூர் தலைமையிடத்து கூடுதல் எஸ்பி ஈஸ்வரன் சென்னை சைபர் டிவிசன் (3) எஸ்பியாகவும், கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பி கோமதி டிஜிபி அலுவலகத்தில் உள்ள நிர்வாகப்பிரிவு ஏஐஜியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 24 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in